மம்தாவை தொடர்ந்து சிக்கிய பாஜக முக்கிய புள்ளி… வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்!

மம்தாவை தொடர்ந்து சிக்கிய பாஜக முக்கிய புள்ளி… வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்கத்தில் ரணகளத்துடன் இருக்கிறது அரசியல் களம். பாஜகவினரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் மிகக் கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். இதனால் வாக்குப்பதிவு நாளில் கூட வன்முறைகள் வெடிக்கின்றன. நேற்று முன்தினம் வெடித்த வன்முறையில் திருணாமுல் கட்சியினர் நால்வரை மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது அம்மாநிலத்தையே உலுக்கியது. கட்சித் தலைவர் மம்தா ஆவேசமடைந்து அமித் ஷாவை பதவி விலக சொன்னார்.

மம்தாவை தொடர்ந்து சிக்கிய பாஜக முக்கிய புள்ளி… வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்!

தற்போது வரை நான்காம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருந்தாலும் பிரச்சாரக் களம் அனல் பறந்துகொண்டே தான் இருக்கிறது. பாஜகவின் நெருக்கடியால் மம்தா பானர்ஜி பாதுகாப்புப் படையினரைக் கடுமையாகப் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இச்சூழலில் தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி மம்தா 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது. இன்று இரவு 8 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ய தடை இருக்கிறது.

மம்தாவை தொடர்ந்து சிக்கிய பாஜக முக்கிய புள்ளி… வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்!

தற்போது பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று முதல் நாளை மறுநாள் 12 மணி வரை பிரசாரம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூச்பெஹார் வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் மம்தா கட்சியினர் 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்த ராகுல், அங்கு குறைந்தது 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என்று சர்ச்சையாகப் பேசியிருந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அவருக்கும் தடா போட்டிருக்கிறது.