அர்ஜுன மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

 

அர்ஜுன மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக சொன்னதும் பாஜகவில் இருந்து விலகி ரஜினியுடன் கைக்கோர்த்தார் அர்ஜூனமூர்த்தி. அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பும் கொடுத்த ரஜினிகாந்த், கடைசியில் கட்சியே தொடங்கவில்லை. உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை எனக்கூறி அனைவரது வாயையும் கட்டிப்போட்டார் ரஜினிகாந்த். இந்த சூழலில் மீண்டும் பாஜகவிடம் தஞ்சம் அடைய முடியாத அர்ஜூனமூர்த்தி, தான் ஒரு புதிய கட்சியை தொடங்க போவதாக அறிவித்தார்.

அர்ஜுன மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

அதன்படியே 2 நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேட்டில் “இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’’ என்று புதிய கட்சியை தொடங்கினார். உண்மையான மாற்றத்தின் அரசியல், தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை எனக் குறிப்பிட்ட அர்ஜூன மூர்த்தி, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அறிவித்தார். இந்த சின்னத்துக்கு கீழ் சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. புதிய கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இந்த சூழலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கும், அர்ஜுன மூர்த்திக்கு ரோபோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.