கொரோனா: வெங்காயத்தை சமைக்காமல் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்!

 

கொரோனா: வெங்காயத்தை சமைக்காமல் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்!

வெங்காயத்தை பச்சையாக, சமைக்காமல் சாப்பிட்டு வந்தால் கூட உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதிலும் கொரோனா சிகிச்சைக்குப் பிறகு அதிகப்படியான ஸ்டீராய்டு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா: வெங்காயத்தை சமைக்காமல் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்!

இந்த நிலையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதுதான் பலரின் கவலையாக உள்ளது. இதற்காக வைட்டமின் சி, ஜிங்க் சத்து மாத்திரை எடுப்பது தொடங்கி சித்தா, ஆயுர்வேத மருந்துகள், மூலிகை, கஷாயம் என்று பலவற்றை மக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

உண்மையில் நம் வீட்டின் சமையல் அறையில் உள்ள பல பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன என்று பலரும் மறந்துவிட்டோம். அதில் முக்கியமான ஒன்று வெங்காயம். இதில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் (பி9, பி6) அதிக அளவில் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றப் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஐந்து வித்தியாசமான ஃபிளவனாய்ட், ஆன்டிஆக்ஸிடணட் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள குர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட உடலில் ஏற்படக் கூடிய இன்ஃபிளமேஷன் எனப்படும் வீக்கத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

இதில் உள்ள கந்தகம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதைத் தடுத்து சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தி உடலின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

தினமும் ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தாலே போதும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மதியம் அல்லது இரவு உணவில் வெங்காயத்தை சாலட் செய்து சாப்பிடலாம். வெங்காயத்துடன் சிறிது தக்காளி, தயிர் சேர்த்து சாலட் செய்து சாப்பிடும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்!