உண்ணும் உணவுகளால் தூக்கமின்மை வரலாம்!

தூக்கமின்மை… பலரையும் பாடாய்ப்படுத்தி வரும் ஒரு பிரச்சினை. பெரும்பாலும் இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாலேயே வருகிறது என்று கூறப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், பல்வலி, காதுவலி என வேறு சில காரணங்களாலும் தூக்கமின்மை வரலாம். மிகவும் குறிப்பாக வாய்வுக்கோளாறுகளாலும்கூட தூக்கமின்மை ஏற்படலாம்.


உடலியக்கம்:
நீண்ட நேரம் கணினியில் வேலை பார்ப்பது, உடல் சூடு, கண் கோளாறுகள் என தூக்கமின்மைக்கான காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இரவுப் பணி புரியும் பலருக்கு பகலில் தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் அவர்களது உடலியக்கம் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மனநோயால் பாதிக்கப்படுபவர்களும்கூட இரவில் தூக்கமின்றி தவிப்பார்கள். மனநிலை சம்பந்தப்பட்ட இந்த பாதிப்பை `இன்சோம்னியா’ என்பார்கள். இழுத்துப் போர்த்திக்கொண்டு எல்லோரும் சுகமாக தூங்கும்போது கொட்ட கொட்ட கண் விழித்துக் கொண்டிருக்கும் `இன்சோம்னியா’ என்ற இந்த நிலையில் மூன்று வகைகள் இருக்கின்றன.


இன்சோம்னியா:
மனதில் ஏற்பட்ட வருத்தங்கள், பயம் காரணமாக ஒருநாளோ அல்லது ஒரு வாரமோ தூக்கமின்றி தவிப்பவர்கள் இருப்பார்கள். உதாரணமாக வீட்டில் உள்ள பொருள்கள் திருடு போனாலோ, அல்லது எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டாலோ, நெஞ்சுக்கு நெருக்கமானவர் இறந்துபோனாலோ தூக்கம் வராது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தூங்கிவிடுவார்கள். இது தானாகவே சரியாகிவிடும் ஒரு நிலை.

அக்யூட் இன்சோம்னியா என்ற ஒரு வகை பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ தூக்கமின்றி தவிப்பார்கள். இந்தப் பிரச்சினை திடீரென சரியாகி மீண்டும் பிரச்சினை தொடரும். மூன்றாவதாக ஒரு நிலை இருக்கிறது. அதாவது, மாதக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த நிலையை கிரானிக் இன்சோம்னியா என்பார்கள்.


மருந்து, உணவு:
தூக்கமின்மை என்பது நாம் உண்ணும் சில உணவுகளாலும் நரம்பு மற்றும் மூளையை தூண்டிவிடும் மருந்துகளாலும் வரலாம். அதிகமாக காபி, டீ சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு மூளை உணர்வு தூண்டப்பட்டு தூக்கமின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படலாம்.

பயம், மன அழுத்தம், அதிக வேலைப்பளு, கடன் பிரச்சினை, உடலுறவுப் பிரச்சினை போன்றவற்றாலும் தூக்கமின்மை ஏற்படலாம். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களும் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். வயதான ஆண்களில் சிலருக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு உறக்கம் கெடலாம்.

இப்படி பல்வேறு காரணங்களால் வரும் தூக்கமின்மை பிரச்சினையை மருந்து, மாத்திரைகளால் மட்டுமே குணப்படுத்திவிட முடியாது. இந்த பாதிப்பு வருவதற்கான மூல காரணத்தை அறிந்து அதை முதலில் சரிசெய்ய வேண்டும். சிகிச்சையுடன் தேவையான மாற்றங்களைச் செய்தால் தூக்கமின்மையில் இருந்து விடுபடலாம்.

Most Popular

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது,...

பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது....

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!