டைனிங் டேபிளில் சாப்பிடுகிறீர்களா? வரக் கூடிய நோய்களின் பட்டியல் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainடைனிங் டேபிளில் சாப்பிடுகிறீர்களா? வரக் கூடிய நோய்களின் பட்டியல்

டைனிங் டேபில்
டைனிங் டேபில்

தரையில் நீங்கள் எப்படி உட்காருகிறீர்கள் என்பதை வைத்தே உங்களது ஆரோக்கியத்தின் அளவை கணக்கிட்டு விடலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அதனால் தான் தரையில் அமரும் போது, சம்மணமிட்டு அமர்ந்து பழக வைத்தார்கள். நமது உடலை இயக்கும் இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் என்று அனைத்து முக்கியமான உறுப்புகளுமே நமது உடலின் மேல் பாகத்தில் தான் இருக்கின்றன. தரையில் சம்மணமிட்டு நாம் அமரும் போது நமது உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக பரவுகிறது. 

eating

டைனிங் டேபிளில் ஸ்டைலாக ஸ்பூன் வைத்து சாப்பிடுவது எல்லாம் செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கு நாகரீகமாக இருக்கலாம். ஆனால், நம் ஆரோக்கியத்திற்கு, சம்மணமிட்டு சாப்பிடுவது தான் சரியானது. உணவை உட்கொள்ளும் போது, தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால், நமது உடலின் செரிமான உறுப்புகளுக்கு தேவையான சக்தி தானாகவே கிடைக்கிறது. உணவு சரியான விதத்தில் செரிக்க வைப்பதற்காகவே நம்மை சம்மணமிட்டு அமரச் சொல்லி வலியுறுத்தினார்கள்.
இன்று பெரும்பாலும் வீட்டில் கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.  குஷன் வைத்த நாற்காலி, சுழலும் நாற்காலி, குளிரூட்டப்பட்ட அறை, முதுகை நேராக நிமிர்த்தி வைப்பதற்கு கொஞ்சமும் தோதாக இல்லாத சொகுசு சோபாக்கள், சாப்பிடும் போது டைனிங் டேபிள், டைனிங் டேபிளின் எதிரே தொலைக்காட்சி, உணவுகளுக்கிடையே மொபைல் போனில் அரட்டை என நம் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும் பொருட்கள் சூழ தான் நாம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். 

eating


நம் வீட்டு பெண்கள், ஒரு நாளின் பெரும் பகுதியை நின்று கொண்டே தான் கடத்துகிறார்கள். சமைக்கும் போதும் நின்று கொண்டே சமைக்கிறார்கள். நாற்காலியில் உட்காரும் போதும் அநேக நேரங்களில் கால்களைத்  காலை தொங்க விட்டுக் கொண்டே தான் உட்கார்கிறார்கள். பெண்களுக்கு கால்களில் வலி, குதிகால் , மூட்டுவலி, முதுகுவலி,  இரத்த அழுத்தம் என எளிதில் இவையெல்லாம் தாக்குவதற்கு இந்த பழக்கம் தான் முதல் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

eating

அலுவலகங்களிலும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்கிறோம். பழைய காலங்களில் அடுப்படிகள் உட்கார்ந்து சமைக்கும் படியே அமைக்கப்பட்டிருந்தன. இன்று நாகரிகம் என்ற பெயரில் நமது பாரம்பரியத்தையும், ஆரோக்கியத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.வீட்டிற்கு விருந்தினர் வருகையின் போதும் பாய் ,ஜமுக்காளம் விரித்தே வரவேற்றோம். முடிந்தவரை வீட்டில் குழந்தைகள் மட்டுமல்லாது நாமும் சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவோம். அலுவலகங்களிலும் நாற்காலியில் அமரும் சூழ்நிலையிலும் சம்மணமிட்டு அமருவோம். விமர்சிக்கப்படுவோம் என்ற தயக்கத்திலேயே நம்மில் பலர் அதை தவிர்க்கிறோம். 
சம்மணமிட்டு அமர்வதால் முதுகுவலி, இரத்த அழுத்தம், கால்களில் நீர் கோர்த்தல், குதிகால்வலி ,வாயுப் பிடிப்பு எனப் பல வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகிறது.

2018 TopTamilNews. All rights reserved.