காலையில சாப்பிடலேன்னா வேலை போயிடுமாம் -ஆராய்ச்சியாளர்கள் சொல்றத கேளுங்க .

 

காலையில சாப்பிடலேன்னா வேலை போயிடுமாம் -ஆராய்ச்சியாளர்கள் சொல்றத கேளுங்க .

.

காலை நேரத்தில் புரத உணவுகளை அதிகமாக உட்கொள்பவர்கள், மாலை உணவின் போது அதிகமாகவும், காலை உணவில் குறைவாகவும் உட்கொள்பவர்களை விட அதிக தசை வலிமையைக் கொண்டுள்ளனர்.
அதனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உங்கள் காலை உணவில் அதிக புரதத்தைச் சேர்க்கவும்.

காலையில சாப்பிடலேன்னா வேலை போயிடுமாம் -ஆராய்ச்சியாளர்கள் சொல்றத கேளுங்க .


மேலும் தினசரி மூன்று வேலை உணவில் புரதத்தை சமமாக சாப்பிடுவது, வயதானவர்களுக்கு அதிக தசை வலிமைக்கு வழிவகுக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
பலர் தங்களது தினசரி புரத உட்கொள்ளலின் பெரும்பகுதியை மதிய உணவு மற்றும் இரவு உணவில் உட்கொள்கிறார்கள். ஆனால் ஒரு புதிய ஆய்வு காலை உணவு புரதச்சத்து நிறைந்ததாக இருந்தால்,நாள் முழுவதும் உற்சாகமாகவும் ,எனர்ஜியோடும் இருக்கலாம் என்று கூறுகிறது.
“காலை உணவுக்கு மட்டும் அதிக புரத உணவுகளை சாப்பிட்டவர்கள், மூன்று வேலை சீரான புரத உணவுகளை உட் கொண்டவர்களை விட , அதிக தசை வலிமையைக் கொண்டிருக்கிறார்களா என்று நாங்கள் பார்க்க விரும்பினோம்” என்று கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஸ்டீபனி செவாலியர் கூறினார்
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்கு, கிட்டத்தட்ட 1,800 பேர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
இதற்கு கனடாவில் கியூபெக்கில் வசிக்கும் , ஆரோக்கியமான 827 ஆண்கள் மற்றும் 67 முதல் 84 வயதுடைய 914 ஆரோக்கியமான பெண்களின் புரத நுகர்வு முறைகளை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.இந்த ஆய்வின் முடிவில் காலை வேளையில் அதிக புரதத்தை உட்கொண்டவர்கள், மாலை உணவின் போது அதிகமாகவும், காலை உணவில் குறைவாகவும் உட்கொண்டவர்களை விட அதிக தசை வலிமையைக் கொண்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டது .அதனால் காலை உணவை சாப்பிடுபவர்கள் வேலையில் சுறுசுறுப்பாக இருந்து முன்னேறுவதாகவும் ,அதை தவிர்ப்பவர்கள் ஆபீசில் டல்லாக இருப்பதால் சிலருக்கு வேலையே பறி போனதாகவும் கூறுகின்றனர் .

காலையில சாப்பிடலேன்னா வேலை போயிடுமாம் -ஆராய்ச்சியாளர்கள் சொல்றத கேளுங்க .