டீ … காஃபி சாப்பிடறதுக்கு பதிலா தினை பாயாசம் சாப்பிடுங்க... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainடீ … காஃபி சாப்பிடறதுக்கு பதிலா தினை பாயாசம் சாப்பிடுங்க...

தினை பாயாசம்
தினை பாயாசம்

சிறுதானியங்கள் எல்லாம் பிரபலமாவதற்கு முன்னால், வீட்டில் செல்லமாக வளர்க்கும் ‘லவ் பேர்ட்ஸ்’ குருவிகளுக்கு உணவாக தினை வாங்கிப் பயன்படுத்தி வந்தோம். மனிதர்கள் இப்பொழுது அதிகமாக சிறுதானியங்களுக்கு மாறத் துவங்கியவுடன், தினையின் விலையே அதிகரித்து விட்டார்கள். 

thinai payasam

உண்மையில் தினை என்பது குருவிக்கும், பறவைகளுக்குமான உணவு மட்டுமே கிடையாது. நமது முன்னோர்களில் பல்லாண்டு ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையாய் இருந்தது அவர்கள் இந்த மாதிரியான சிறுதானியங்களை சாப்பிட்டதும், உடல் உழைப்பில் அக்கறை செலுத்தியதும் தான். 

மனிதனுக்கான பாரம்பரிய சிறுதானிய உணவில் முதலிடத்தில் இருந்தது தினையே. இதில் உள்ள கால்சியம், பீட்டா கரோட்டீன் ,நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் ஒரு நாளுக்கு நமக்கு தேவையான புரத்தத்தை ஒரு வேளையிலேயே தரும் அளவு சக்தி வாய்ந்த சிறுதானியம். அதனாலேயே குழந்தைகளுக்கு தரவல்லதில் முதலிடத்தை பிடித்துக் கொள்கிறது.

தேவையான பொருட்கள்

தினை அரிசி        - 1/2கப்
பாசிபருப்பு        - 1/4கப்
வெல்லம்        - 1/2கப்
பால்            - 250மிலி
நெய்            - 1டீஸ்பூன்
முந்திரி பருப்பு     - 5
உலர் திராட்சை    - 5
ஏலக்காய்         - 2(பொடிக்கவும்)
சுக்கு    தூள்        - ஒரு சிட்டிகை

செய்முறை

thinai payasam

வெறும் வாணலியில் பாசி பருப்பு மற்றும் திணை அரிசியை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்  திணை, பாசிபருப்புடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 2அல்லது 3 விசில் வரை குக்கரில் வேகவைத்து எடுக்க வேண்டும். வெல்லத்தை கொதிக்க வைத்து வடிகட்டி, 5 நிமிடங்கள் மீண்டும் கொதிக்கவிடவேண்டும்.  திணை அரிசியுடன் வெல்லக் கலவையை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி விட வேண்டும்.  நெய் விட்டு வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்த பிறகு ஏலக்காய் தூள், சுக்குத்தூள் சேர்க்கவேண்டும். இவை நன்றாக சூடு ஆறிய பிறகே பால் சேர்க்க வேண்டும்.  பால் வாசனை சிலருக்கு ஒவ்வாமையையும், விருப்பமின்மையையும் ஏற்படுத்தும். இப்பொழுது கிடைக்கும் பாலில் எல்லாம் பெரிதாக சத்துக்கள் இல்லை. அவர்கள் பாலுக்கு பதிலாக, தேங்காய் பாலைச் சேர்த்துக்  கொள்ளலாம்.  மாலை காபி அல்லது டீ க்கு பதிலாக திணைபாயாசத்தை அருந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உடல் வலுப்பெறும்.

2018 TopTamilNews. All rights reserved.