“சூரிய கிரகணத்தை பார்க்க ஒரு ஈசி டிரிக்”.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!

“சூரிய கிரகணத்தை பார்க்க ஒரு ஈசி டிரிக்”.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரு நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழும். அதன் படி இந்த ஆண்டின் சூரிய கிரகணம் இன்று காலை 9.16 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வின் போது சந்திரன் சூரியனின் கதிர்களை பூமியில் அடைவதைத் தடுக்கிறது. இன்று மாலை 3:04 மணிக்கு நிறைவடையும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய பில்டர் கண்ணாடி அணிந்து பார்க்கலாம் என்றும், வெல்டிங் கண்ணாடி பயன்படுத்திப் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

“சூரிய கிரகணத்தை பார்க்க ஒரு ஈசி டிரிக்”.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் இல்லாமல் எப்படி பார்ப்பது என்ற வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், “ஒரு சிறிய அட்டை பெட்டியின் முன்பக்கம் கட்டமாக ஓட்டை போட்டுக் கொண்டு, அதன் நேர் எதிர் பக்கமாக ஒரு ஊசியை வைத்து மிகச்சிறிய துளை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த அட்டை பெட்டியின் உள்பக்கமாக வெள்ளை நிற பேப்பர் ஒட்டிக் கொண்டால், அது ஒரு திறை போன்று செயல்படும்.

“சூரிய கிரகணத்தை பார்க்க ஒரு ஈசி டிரிக்”.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!

அப்படி செய்த பின்னர் சூரியன் உங்களுக்கு பின்புறமாக இருக்கும் திசையில் நின்றுக் கொண்டு, பெரிய துளையின் வழியே பார்த்தால் சிறிய துளையின் வழியே சூரிய கிரகணம் தெளிவாக தெரியும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.