’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

நன்கு தூங்கி காலையில் எழும்போது புதிய புத்துணர்வோடு வேலைகளைக் கவனிப்பீர்கள். பார்க்கும் நண்பர்களோடு உற்சாகமாகப் பேசுவீர்கள். அன்றைய நாள் முழுவது மகிழ்ச்சியோடு கழியும்.

இதற்கு மாறாக, இரவில் தூக்கமே வராமல் விடியற்காலை 2 மணிக்குத்தான் கொஞ்சமாக தூக்கம் வந்து, அப்படியே தூங்கி, காலை 9 மணிக்கு எழுந்தால்…. அவசரம் அவசரமாக ஆபிஸ் புறப்பட வேண்டும். ஒழுங்காக காலை கடன்களைக்கூட முடிக்க நேரம் இருக்காது. பிறகு எங்கே சாப்பிடுவதெல்லாம்.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

தூக்கம் என்பது ஒரு மனிதரின் உடல் உறுப்புகள் சீராக இயங்க மிகவும் முக்கியம். அதேபோல மனிதர்களின் மனநிலையைக் காக்கவும் தூக்கம் அவசியம். இரவில் நன்றாகத் தூங்காத ஒருவர், ஆபிஸ், எதிர்படும் நண்பர் என எல்லோரிடம் எரிந்து எரிந்து விழுவார்.

அவரின் மிக நல்ல நண்பர்கள்கூட அவரை விட்டு விலகி விடுவார்கள். அலுவலகத்திலும் நல்ல பெயர் கிடைக்காது. வேலையிலும் முழு கவனம் செலுத்த அவரால் இயலாது. ஒவ்வொன்றுமே சிக்கலாக முடியும்.

எனவே, போதுமான நேரம் தூங்குவதோடு, சரியான நேரத்தில் தூங்க ஆரம்பிக்கவும் வேண்டும்.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

இரவு 9 மணிக்கு தூங்கச் சென்று விடியற்காலை 4 மணிக்கு எழுவது நல்லது என்கிறார்கள். ஆனால், இப்போதைய தொழில்நுட்ப உலகில் அது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது.

ஆனாலும்,  இரவு 10 மணிக்காவது தூங்கச் சென்றால்தான் விடியற்காலை 5 மணிக்கு எழுகையில் அலுப்பு இருக்காது.

நாங்கள் படுக்கைக்குச் சென்றாலும் தூக்கம் வந்தால்தானே என்பவர்களுக்குத்தான் ஈஸியான டிப்ஸ் இதோ.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

ஒன்று: தூங்கச் செல்வதற்கு சரியாக இரண்டு மணிநேரத்திற்கு முன் தொலைக்காட்சி மற்றும் மொபைலைப் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். மொபைலில் போன் வந்தால்கூட பேசிவிட்டு வைத்துவிடுங்கள். வாட்ஸப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தால், அதில் யாரேனும் ஃபேஸ்புக் லிங்கை அனுப்பியிருப்பார்கள். அப்படியே ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கினால் வெளியே வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். எனவே, உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு டெக்னாலஜிக்கு தடை போடுங்கள்.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

இரண்டு: உறங்குவதற்கு முன்பு, சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன் சூடான பானம் ஏதேனும் அருந்தலாம். டீ, காபி தூக்கத்தைத் தள்ளி வைத்துவிடும் என்பதால், மிதமான சூட்டில் பால் ஒரு கிளாஸ் குடிக்கலாம். அப்படிக் குடித்த உடனே படுத்துவிடக் கூடாது.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

மூன்று: தூங்கச் செல்வதற்கு முன்பு, உங்களுக்கு மிகப் பிடித்த பாடல்களைக் கேட்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்ல மனநிலையை அளிக்கும் ஏதேனும் மனக்குழப்பம் இருந்தால் அதை ஒத்தி வைக்கச் சொல்லும். விருப்பமான புத்தகங்களை வாசிக்கவும் செய்யலாம்.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

நான்கு: உடல் இயக்கம் சார்ந்த வேலைகளில் இல்லாதவர்கள் தினமும் அரை மணிநேரத்திலிருந்து ஒரு மணிநேரம் வரை நன்கு உடற்பயிற்சி செய்வதைப் பழக்கிக்கொள்ளுங்கள். இது உடலை வலுப்படுத்த மட்டுமல்ல, தூக்கம் வரவழைக்கவும் நிச்சயம் உதவும்.

’தூக்கம் வரவே நைட் 2 மணியாயிடுது’ என்பவரா  நீங்கள்? – தூக்கம் வர உதவும் ஈஸி டிப்ஸ்

ஐந்து: படுக்கையில் படுத்தும் தூக்கமே வரவில்லை என்றால், உங்களுக்கு மிகப் பிடித்த சம்பவங்களை நினைவுக்கூருங்கள். எதிர்மறை சிந்தனைகளை வலுகட்டாயமாக ஒதுக்கி வையுங்கள். ஏனெனில் அவைதான் முண்டியடித்துக்கொண்டு முதலில் வரும். பாசிட்டிவான சிந்தனைகளையும் நிகழ்ச்சிகளையும் மட்டுமே நினைவூட்டிப் பாருங்கள். இது தொடர, தொடர சீக்கிரமே தூக்கம் வந்துவிடும்.