Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் மனச்சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக ஈஸி டிப்ஸ்

மனச்சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக ஈஸி டிப்ஸ்

கொரோனா கால லாக்டெளன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முன்புபோல சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாவிட்டாலும் அவசியமான வேலைகளுக்குச் சென்றுவிட முடிகிறது.

ஆனாலும் எவ்வித வேலையும் இன்றி, சுற்றிப்பார்க்க என்று பயணங்கள் மேற்கொள்ள முடியவில்லை. கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுக்குள் பெரும்பாலான நேரம் அடைந்து கிடந்திருக்கிறோம். அதனால், பலரும் மனச்சோர்வுக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

GOQii எனும் தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்தியாவில் 43 சதவிகிதம் பேர் மனச்சோர்வில் இருப்பதாகக் கூறுகிறது. இந்தச் சதவிகிதம் என்பது ரொம்பவே அதிகம். ஏனெனில் இரண்டில் ஒருவர் எனும் அளவை நெருங்கி யிருக்கிறது. இவர்களில் 6 சதவிகிதத்தினர் தீவிர மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மனச்சோர்வு என்பது நம்மை அறியாமல் நுழைந்துவிடக்கூடியதுதான். ஆனால், அதை நம்மால் உணர முடியும். அது நம்மை தொட்டவுடனே உஷாராகி அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை ஆராய வேண்டியது அவசியம். இல்லையெனில், மனநோயாக மாறி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு மாறிவிடக்கூடும்.

மனச்சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

இருட்டில் வெளிச்சம் இருந்தால்தான் வழியைத் தேடி பயணிக்க முடியும். அதனால் முதலில் மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறியுங்கள்.  கொரோனா காலத்தில் தனிமை உணர்வால் இந்த மனச்சோர்வு என்றால், தனிமையை உடைக்க வழியைக் கண்டறியுங்கள்.

காலை முதல் இரவு வரை உங்கள் நாளின் பிஸியாக ஷெட்யூல் போடுங்கள். நண்பர்களோடு, உறவினர்களோடு வீடியோ கால் பண்ணி பேசுங்கள். அல்லது எல்லா நண்பர்களும் சேர்ந்து ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்து பேசுங்கள்.

பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளால் மனச்சோர்வு என்றால், கவலை பட்டால் உடலும் மனமும் கெடுமே தவிர பிரச்னை தீராது என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். அதுவும் அடிக்கச் சொல்லுங்கள். பிறகு பொருளாதார சிக்கலைத் தீர்க்கும் வழிகளை நோட்டில் எழுதி அதை ஃபாலோ செய்யுங்கள்.

சிரிப்பை விட பெரிய மருந்து இல்லை. சிரிக்கும்போது எண்டார்பின் ஹார்மோன்கள் சுரக்கும். இது நம்முடைய சாதாரணம் தலைவலியைக் கூட போக்கிவிடும். அதனால், சிரிக்கும் சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களோடு அதிக நேரம் செலவிடுங்கள். குழந்தைகளை அதிகாரம் செலுத்தாமல் நீங்கள் அவர்களோடு ஒருவராக மாறுங்கள். டிரஸ் அழுக்காகும்படி தரையில் புரண்டாலும், தண்ணீர் ஊற்றினாலும் நீங்களும் செய்யுங்கள். அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியே மனச்சோர்வுக்கு முக்கிய மருந்தாக மாறும்.

குழந்தைகள் இல்லையெனில், நகைச்சுவை படங்கள், நகைச்சுவை சேனல் நிகழ்ச்சிகள் என உங்களின் ஸ்கிரினிங் டையத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

நோய்ப் பரவும் காலம் என்பதால் எச்சரிக்கை செய்கிறேன் என்று தவறான செய்திகளையும் வாட்ஸப், ஃபேஸ்புக் மூலம் சிலர் பரப்புவார்கள். அவற்றை நம்பாமல், ஆதாரபூர்வமான செய்திகளை மட்டுமே படியுங்கள்… நம்புங்கள்… பின்பற்றுங்கள்.

அதிகம் ஊர் சுற்றமுடியாத காலத்தில் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். எதிர்மறையான செய்திகளைக் கேட்கவோ, படிக்கவோ செய்யாதீர்கள். அதுவே பாதி பிரச்னையை சரி செய்துவிடும்.

உணவுப் பழக்கத்தை செக் பண்ணுங்கள். உடலுக்கு ஒத்துவராத உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு, உடல் உபாதைகள் தொடர்ச்சியாக வந்தாலும் மனச்சோர்வடைய வாய்ப்பிருக்கிறது. அதனால் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறுங்கள். மஞ்சள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது மனச்சோர்வு விலகும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

மகிழ்ச்சி

என்ன செய்தாலும் மனச்சோர்விலிருந்து விடுபட முடியவில்லை என்றால், மிக நெருக்கமான நண்பரிடம் மனம் திறந்து பேசுங்கள். உங்கள் பிரச்னையை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், ஆத்மார்த்தமான நண்பரால் சாத்தியமாகக்கூடும். அவர் சொல்வழி நடந்துபாருங்கள். நல்ல பலன் கிடைக்கலாம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை

இயற்கை விவசாயத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதால், நாடு முழுவதும் பசு சாணத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை செய்துள்ளார். வேளாண்மை...

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களில் டெல்லிக்கு பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும்,...
TopTamilNews