”சுலபமாக வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்கள்”ஆந்திரா தொடர்ந்து முதலிடம்

 

”சுலபமாக வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்கள்”ஆந்திரா தொடர்ந்து முதலிடம்

சுலபமாக வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

”சுலபமாக வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்கள்”ஆந்திரா தொடர்ந்து முதலிடம்

இந்த பட்டியலில் ஆந்திர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் 12வது இடத்தில் இருந்த உத்தர பிரதேசம், பத்து இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 2வது இடத்தில் இருந்த தெலங்கானா மூன்றாவது இடத்திற்கு சரிந்து உள்ளது. தொடர்ந்து மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் முறையே 4, 5, 6 ஆகிய இடங்களிலும், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

”சுலபமாக வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்கள்”ஆந்திரா தொடர்ந்து முதலிடம்

14வது இடத்துக்கு முன்னேறிய தமிழகம்

கடந்த 2018ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 15வது இடத்தில் இருந்த தமிழகம், ஒரு இடம் முன்னேறி, 14வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

”சுலபமாக வர்த்தகம் செய்ய ஏற்ற மாநிலங்கள்”ஆந்திரா தொடர்ந்து முதலிடம்

எஸ்.முத்துக்குமார்