பொங்கல் பண்டிகையை ஓட்டி விற்பனைக்கு தயார் நிலையில் புதுப்பானைகள்…..

 

பொங்கல் பண்டிகையை ஓட்டி விற்பனைக்கு தயார் நிலையில் புதுப்பானைகள்…..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவது பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இயற்கையுடன் ஒன்றி வாழும் தமிழர் மரபில், தங்கள் உழவு தொழிலுக்கு ஆதாரமாக திகழும் சூரியக் கடவுளுக்கும், அதற்கு உறுதுணையாக விளங்கும்
கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் பொங்கல் விழாவில், புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் முதலே மண் பானைகள் தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். குறிப்பாக மண் பானைகளுக்கு புகழ்பெற்ற சிவங்கை மாவட்டம் மானாமதுரையில் கால்வாய்களில் மண்ணை சேரித்து, பக்குவம் செய்து பல்வேறு அளவிலான மண் பானைகளை உருவாக்கி விற்பனைக்கு உள்ளனர்.

பொங்கல் பண்டிகையை ஓட்டி விற்பனைக்கு தயார் நிலையில் புதுப்பானைகள்…..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள வலையங்குளம் பகுதியில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்ட வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மண்
பானைகள், மண் அடுப்பு மற்றும் அகல் விளக்குகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதேபோல், மேலூர் பகுதியை சேர்ந்த மட்பாண்ட
தொழிலாளர்கள் அழகர்கோவில் மலை மூலிகைநீர் தேங்கும் கண்மாய் மணலை கொண்டு உருவாக்கியுள்ள மண்பானைகள் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி
செல்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பாராண்ட்பள்ளி பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மட்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தவிர்த்து,
பல்வேறு விதமான தெய்வச் சிலைகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை கலை நுணுக்கங்களுடன் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார். இதேபோல், கோவை
மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண்ணை சேரித்து மண்பானைகள், பல்வேறு வகையிலான ஜாடிகள், அடுப்புகளை உருவாக்கி விற்பனைக்கு வைத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை ஓட்டி விற்பனைக்கு தயார் நிலையில் புதுப்பானைகள்…..

கொரோனா ஊரடங்கு காரணமாக கார்த்திகை தீப விளக்கு விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தைப் பொங்கலுக்கு அதிகளவு பொங்கல் பானைகள்விற்பனையாகி வருவதால் தொழில் நலிவடைந்த மட்பாண்ட தொழிலாளர்கள் சிறிது மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். எனினும், அரசு பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கியது போல, மண்பானை மற்றும் அடுப்புகளை வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். மட்பாண்ட தொழிலுக்கு முதன்மையான களிமண் அள்ளுவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.