E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர வைக்கும் ஆதாரம்…

 

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர வைக்கும் ஆதாரம்…

மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் ‘போவோம் போவோம் மேஜிக் ஜர்னி’ என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில்  வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை பார்த்த பலரும்,மணி ஸ்பீல் பெர்க்கின் ஈ.டி படக்காட்சியை சுட்டுவிட்டார் என்று அப்போது பேசினார்கள்.

மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் ‘போவோம் போவோம் மேஜிக் ஜர்னி’ என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில்  வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை பார்த்த பலரும்,மணி ஸ்பீல் பெர்க்கின் ஈ.டி படக்காட்சியை சுட்டுவிட்டார் என்று அப்போது பேசினார்கள்.

satya

ஆனால்,ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கே சத்யஜித்  ராயின் கதையை சுட்டுத்தான் ஈ.டி படத்தையே எடுத்தார் என்று அப்போது அவர்களுக்குத் தெரியாது.
அதிர்ச்சியாய்த்தான் இருக்கும். நம்ம ஊர் இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களை காப்பியடிப்பது நமக்கு புதிதல்ல.ஆனால்,ஒரு ஹாலிவுட் இயக்குநர், அதுவும் ஸ்டீபன் ஃபீல் பெர்க் காப்பியடித்தார் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

movie

சத்யஜித் ராய் ‘சந்தேஷ்’ என்கிற தான் நடத்திய குழந்தைகள் பத்திரிகையில் ‘பங்குபாபுபர் பந்து’ ( பங்குபாபுவின் நண்பன்) என்று ஒரு கதையை எழுதியிருந்தார்.ஒரு வங்காள கிராமத்துக் கோவில் குளத்துக்குள் வந்து இறங்குகிறது ஒரு வேற்று கிரக  பறக்கும் தட்டு.அதில் வந்த ஒரு வேற்று கிரக வாசியும் பங்குபாபுவும் நண்பனாகிறார்கள்.அவர்களோடு போர் வெல் போடவந்த ஒரு அமெரிக்க இஞ்சீனியர்,ஒரு பத்திரிகைக்காரன் . அந்த வேற்றுக்கிரக  பறக்கும் தட்டு எப்படி திரும்பிப் போனது என்பது கதை.இந்தக் கதை வெளிவந்த காலத்தில் ஸ்பீல் பேர்க்குக்கு 17 வயது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்துக்கு வந்து காட்டுக்குள் தாவர மாதிரிகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது ஒரு வேற்றுகிரக தாவரவியல் விஞ்ஞானிகள் குழு.திடீரென அரசு அதிகாரிகள் வந்துவிட அவர்கள் தப்பியோடும் அவசரத்தில் ஒரு சக விஞ்ஞானியை விட்டு விட்டு பறந்து விடுகிறார்கள்.அந்த விஞ்ஞானிதான் E.T.அது எல்லிஸ் என்கிற சிறுவனுடன் நடந்தது .எப்படி தன் ஊருக்குத் திரும்புகிறது என்பது ஸ்பீல்பெர்க் படத்தின் கதை.

movie

ரே தனது சாருலதா படத்தைப் பார்த்து கண்கலங்கிய பீட்டர் செல்லர்ஸ் என்கிற ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரிடம் இந்த கதையைச் சொல்ல,அவர் வில்சன் என்கிற இன்னொரு நபரை அறிமுகம் செய்கிறார்.ரேயின் கதையில் வரும் இந்தியப் பத்திரிகையாளராக பீட்டர் செல்லர்ஸும்,அமெரிக்க பொறியாளராக மார்லன் பிராண்டோ ,அல்லது ஸ்டீவ் மெக்குவினை ( மெக்கன்னாஸ் கோல்டு புகழ்) நடிக்கவைப்பது என்றும் முடிவாகிறது.தயாரிப்பு கொலம்பியா பிக்ச்சர்ஸ்!
ஆனால்,வில்சன் பாதியில் தலையை மொட்டை அடித்துக்கொண்டு துறவி ஆகிவிட படம் நின்று போனது.அதற்குள் சத்யஜித் ராயின் ஸ்கிரிப்ட் பல காப்பிகள் எடுக்கப்பட்டு பலராலும் படிக்கப்பட்டு விட்டது.இது நடந்தது 1967-ல்.

et

அதற்குப் பிறகு 1982-ல் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘ஈ.டி’ வெளிவந்த போது பீட்டர் செல்லர்ஸ் உட்பட பலர் அதிர்ச்சி அடைந்தார்கள்.அதற்கு இன்னொரு காரணம்,ஈ.டி படத்தை தயாரித்தது யுனிவர்சல் பிக்சர்ஸ் என்றாலும், வெளியிட்டது பழைய கொலம்பியா பிக்சர்ஸ் தான்.இது பற்றி இயக்குநர் ஸ்பீல்பெர்கிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது ‘ சத்யஜித் ரே அந்த திரைக்கதையை எழுதியபோது நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன் என்று ஒரே வழியில் பதில் சொல்லி விட்டார்.1946-ல் பிறந்த ஸ்பீல்பெர்குக்கு அப்போது வயது 17 தான்.

satyaji

ஆனால்,சத்யஜித் ரே தனது பேட்டி ஒன்றில் இது பற்றி பேசும்போது ‘ ஆமாம்,இரண்டு கதைகளுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன,ஆனால் அவர் மறுத்து விட்டார் ‘ என்கிறார்.என்னதான் மறுத்தாலும் ஈ.டி வருவதற்கு 20 வருடம் முன் அதே பெரிய மண்டை,அதே மூன்று விர்ல்களுடன் சத்யஜித் ரே,தன் கையால் வரைந்த வேற்று கிரகவாசியின் படம்,ஹாலிவுட் இயக்குநர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

ஆகவே,முருகதாஸ்களே,அட்லிகளே கவலைப்படாமல் ஹாலிவுட் படங்களை சுடுங்கள்.பாட்டன் சொத்தை திருடியவனிடம் பதிலுக்கு கொள்ளை அடிப்பது திருட்டல்ல,பலிக்கு பலி!