இன்று முதல் மாவட்டத்திற்குள் செல்ல இ-பதிவு கட்டாயம்!

 

இன்று முதல் மாவட்டத்திற்குள் செல்ல         இ-பதிவு கட்டாயம்!

தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 33,181பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15லட்சத்து 98ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 311 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,670ஆக அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணிவரை மட்டுமே காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறந்திருக்கும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மாவட்டத்திற்குள் செல்ல         இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவை போன்றவற்றிற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.