முடங்கிய இ-பாஸ் பதிவு தளம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

 

முடங்கிய இ-பாஸ் பதிவு தளம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகியுள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சி கடை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் மின் பணியாளர்கள், கணினி பழுது பார்க்கும் இயந்திரங்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் பணிகளைத் தொடங்கலாம் என்றும் அரசு அனுமதி அளித்துள்ளது.

முடங்கிய இ-பாஸ் பதிவு தளம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

எனினும், அவர்களின் பாஸ் பெற்றுக்கொண்டு தான் பயணிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பணிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருப்போருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை தளர்வுகள் அமலுக்கு வந்ததில் இருந்து இ-பதிவு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கிவிட்டது.

அதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. காலையில் இருந்து இணையதளம் செயல்படாததால் அவசர தேவைக்காக செல்லும் பலர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்று மாலைக்குள் இ-பதிவு இணையதளம் சரி செய்யப்படுமென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.