தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி

 

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒரு சில தளர்வுகளை அறிவித்திருந்தார். அதாவது, கடைகள் அனைத்தும் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் சென்னையில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் இதுவரை அமலில் இருந்து வந்த இபாஸ் நடைமுறை ஆகஸ்ட் மாதமும் தொடரும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி

அதன் படி முதல்வர் அறிவித்த கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதனிடையே இபாஸ் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவுவதாகவும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு கூட இபாஸ் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல அரசு இபாஸ் தருவதில் ஏற்படும் பல சிக்கல்களால், பல இடங்களில் போலி இபாஸ் தருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூரில் ரூ.1,500க்கு பாஸ் தருவதாக கூறிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இபாஸ் நடைமுறையை அரசு எளிதாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இபாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது மாவட்டந்தோறும் இபாஸ் முறையை எளிமைப்படுத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.