அலட்சியம் காட்டும் தமிழக அரசு… இ – பாஸால் புலம்பி தவிக்கும் பயணிகள்!

 

அலட்சியம் காட்டும் தமிழக அரசு… இ – பாஸால் புலம்பி தவிக்கும் பயணிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புதிய உத்தரவு அமலுக்கு வந்த பிறகும், பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகமாகிக் கொண்டே செல்வதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அலட்சியம் காட்டும் தமிழக அரசு… இ – பாஸால் புலம்பி தவிக்கும் பயணிகள்!

புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது கடந்த ஆண்டு நடைமுறையிலிருந்த இ- பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது. அதாவது, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக இ- பாஸ் பெற்று தான் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது இ – பாஸ் நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இ -பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு போடப்பட்டதோடு சரி, அவை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட வில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அலட்சியம் காட்டும் தமிழக அரசு… இ – பாஸால் புலம்பி தவிக்கும் பயணிகள்!

வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 40,000 பேர் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிதே தவிர, இ- பாஸ் வைத்திருக்கிறார்களா என்ற சோதனை செய்யப்படவில்லை. அண்மையில் தமிழகம் வந்த பயணி ஒருவர், தன்னிடம் யாரும் இ- பாஸ் கேட்கவில்லை என்றும் தனிமைப் படுத்திக் கொள்வது தொடர்பாக யாரும் தன்னை தொலைபேசியில் அழைக்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார். பின்பற்றப்படாமல் இருக்கும் பட்சத்தில் எதற்கு இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டுமென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், இ – பாஸ் நடைமுறை சோதனை செய்வது குறித்து எங்களுக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தும் தமிழக அரசு அதனை முறையாக பின்பற்றாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.