ரயில்களில் பயணிக்கவும் இ-பாஸ் கட்டாயம்: தெற்கு ரயில்வே

 

ரயில்களில் பயணிக்கவும் இ-பாஸ் கட்டாயம்: தெற்கு ரயில்வே

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ/ மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில்மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவுசெய்து e-pass பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நோய்த்தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும், ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பயணிகள் உணவு மற்றும் இதர உணவுப்பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிக்கவும் இ-பாஸ் கட்டாயம்: தெற்கு ரயில்வே

சொந்த வாகனத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் அல்லது தமிழகம் விட்டு மற்ற மாநிலங்கள் செல்ல tnepass.tnega.org/#/user/pass என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து செல்ல மற்றும் ஊரடங்கால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிப்போர்,அரசு வசதிகளை பெற்று திரும்ப, இ பாஸ் விண்ணப்பிக்க rtos.nonresidenttamil.org என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்