தமிழகத்தில் விமான பயணங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – கோவையில் திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள்

 

தமிழகத்தில் விமான பயணங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – கோவையில் திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள்

கோவை: தமிழகத்தில் விமான பயணங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன. இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து மே 25 முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது.

விமான விமான நிலையங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து விட்டது. அதன்படி பயணிகள் விமான நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். உள்நாட்டு விமான பயணம் குறித்து தமிழக அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு விமான பயணம் மூலம் செல்லும் பயணிகள் தங்களின் விவரங்களை தமிழ்நாடு இ-பாஸ் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

தமிழகத்தில் விமான பயணங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – கோவையில் திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள்

விமான பயணம் செய்யவுள்ள பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா? அவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? கடைசி இரண்டு மாதங்களில் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவர்களா? போன்ற பல விவரங்களை அந்த இணையதளத்தில் பயணிகள் பதிவு செய்ய வேண்டும். அதேசமயம் இந்த இ-பாஸ் இணையதளத்தில் தவறான தகவல்களை அளித்து தமிழகம் வர முயற்சி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி கூறுகையில், “விமான பயணம் செய்யவுள்ளவர்கள் ஆன்லைனில் இ-பாஸ் பெற விண்ணப்பித்தால் உடனே கிடைத்து விடும். பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டுடன் அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்தால் உடனே கிடைத்து விடும். இ-பாஸ் இல்லாமல் டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த 4 பயணிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே புக்கிங் ஏஜென்ட்கள் இ-பாஸ் கட்டாயம் என்று கூறி விடுவதால் பெரும்பாலான பயணிகள் அதை விண்ணப்பித்து பெற்று விடுகிறார்கள்” என்றார்.