கள்ளச் சந்தையில் இ-பாஸ்… தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனா! – அரசு என்ன செய்கிறது?

 

கள்ளச் சந்தையில் இ-பாஸ்… தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனா! – அரசு என்ன செய்கிறது?

சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறவர்கள் விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்து வருவதால் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரலாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழகத்தில் முறையாக, நியாயமான காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக பாஸ் கிடைப்பது இல்லை, இதனால் கள்ளச் சந்தையில் இ-பாஸ் அதிக விலைக்கு விற்பனையாவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால் கன்னியாகுமரியில் ஒருவர் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்து நான்காயிரம் ரூபாய் வசூல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகளை ஏற்றிவந்த அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளச் சந்தையில் இ-பாஸ்… தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனா! – அரசு என்ன செய்கிறது?தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் எந்த அளவுக்கு குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதற்கு இ-பாஸ் கண் கண்ட சாட்சி என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். போலீஸ் கமிஷனர், எஸ்.பி அலுவலகத்தில் இ-பாஸ் வாங்கலாம் என்றார்கள், பிறகு சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு சென்றது இ-பாஸ் வழங்கும் திட்டம். இப்போது அது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்பு நேரில் வர வேண்டும் என்றார்கள், கூட்டம் கூடியதால் ஆன்லைனுக்கு அது மாற்றப்பட்டது. அதே போல், முன்பு புறப்படும் அல்லது சென்று சேரும் மாவட்டம் என எங்காவது ஒரு இடத்தில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். தற்போது சென்று சேரும் இடத்தின் மாவட்ட நிர்வாகம்தான் இ-பாஸ் வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச் சந்தையில் இ-பாஸ்… தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனா! – அரசு என்ன செய்கிறது?நேரில் வர வேண்டும் என்று கூறினால் எவ்வளவு பேர் வருவார்கள் என்ற திட்டமிடல் கூட இல்லாத நிர்வாகம் தமிழகத்தில் உள்ளது. ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது அதில் உள்ள சாதக, பாதங்கள், பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்து கூட முடிவெடுக்க முடியாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதற்கு பெயர் நிர்வாகமா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது தமிழகத்தை கொரோனா மண்டலம் என பிரித்து வைத்துள்ளனர். இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் ஏழு, எட்டு மாவட்டங்கள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு இ-பாஸ் வாங்கிவிட்டால் அதைக் காட்டியே அந்த மண்டலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சென்றுவிடலாம் என்ற நிலை உள்ளது. அரசின் இந்த திட்டங்கள் எல்லாம் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து வருவதாக கூறப்படுகிறது.

கள்ளச் சந்தையில் இ-பாஸ்… தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனா! – அரசு என்ன செய்கிறது?தற்போது சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பலரும் சென்னையை காலி செய்து வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருகின்றன. போலி இ-பாஸ் வாங்கியாவது சொந்த ஊருக்கு சென்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலரும் தயாராகிவிட்டனர். கடந்த 13 நாளில் மதுரைக்கு இ-பாஸ் வாங்கி வந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆனால் இவர்களில் 500 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்காணிப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் இவர்கள் மூலமாக மற்ற மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் கொரோனா பரவி வருகிறது. அரசு போதுமான பரிசோதனைகளை செய்வது இல்லை என்பதால் மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் உள்ளது. எப்போது பிரச்னை வெடிக்கும் என்று தெரியவில்லை என்று எச்சரிக்கின்றர் மருத்துவர்கள்!