சங்கி மங்கியின் மகன் சூனா, பானாவுக்கு இ-பாஸ்! வைரலாகும் புகைப்படம்

 

சங்கி மங்கியின் மகன் சூனா, பானாவுக்கு இ-பாஸ்! வைரலாகும் புகைப்படம்

திருப்பூரில் வடிவேல் கதாப்பத்திரத்திற்கு இ- பாஸ் வழங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட இபாஸ் முறை இந்த மாதமும் அமலில் இருந்து வருகிறது. இதனை நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தும், இபாஸை தகர்க்க முடியாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்த அரசு, சில தளர்வுகளை மட்டும் அளித்தது. தற்போது இருக்கும் நடைமுறையின் படி, பிற மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் இபாஸ் கட்டாயமாக பெற வேண்டும். ஆனால் இ-பாஸில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சங்கி மங்கியின் மகன் சூனா, பானாவுக்கு இ-பாஸ்! வைரலாகும் புகைப்படம்

இதனை கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகிவருகிறது. வடிவேல் கதாபாத்திரமான சூனா பானா பெயரில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். தந்தை பெயர் சங்கி மங்கி எனவும், திருப்பூரில் இருந்து, மதுரைக்கு செல்ல உள்ளதாகவும் இ- பாஸில் குறிப்பிட்டுள்ளார். தொடர்பு எண் மட்டும் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வினாக்களுக்கு கிண்டல் செய்யும் விதமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. வாகன எண்கள் முழுமையாக பூஜ்யம் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து இ-பாஸ் கொடுத்திருப்பதை கிண்டலடிக்கும் விதமாக புகைப்படம் வைரலாகி வருகிறது.