“விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ்” : இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அறிவிப்பு!

 

“விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ்”  : இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா சற்று வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அவற்றை இன்னும் சில காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தமிழக அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.

“விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ்”  : இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அறிவிப்பு!

இருப்பினும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தொடர்ந்து இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் அதை விண்ணப்பித்து பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

“விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ்”  : இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அறிவிப்பு!

இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ்  பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.