வேலைக்காக வந்தால் கூட இ-பாஸ் இருந்தால் தான் அனுமதி வழங்கப்படும்- மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

 

வேலைக்காக வந்தால் கூட இ-பாஸ் இருந்தால் தான் அனுமதி வழங்கப்படும்- மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 8 மண்டலங்களில் சென்னை மட்டும் தனி மண்டலமாக ஆக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பணி நிமித்தமாக தினமும் பல பேர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். அதே போல திருவள்ளூருக்கு வரும் நபர்களையும் அவர்களின் ஆதார் அட்டையை பரிசோதித்த பிறகு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் அவ்வாறு வர கூடாது என்றும் வேலைக்காக வந்தால் கூட இ-பாஸ் கட்டாயமாக பெற்று வர வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலைக்காக வந்தால் கூட இ-பாஸ் இருந்தால் தான் அனுமதி வழங்கப்படும்- மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

இது குறித்து பேசிய அவர், சென்னையில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பணியிடங்களுக்கு தொலைவில் வசிப்பவர்கள் பாஸ் பெற்றுக் கொண்டு பணி செய்யும் இடத்தில் அருகே தங்கிக் கொள்ளலாம் என்றும் தினமும் சென்னையில் இருந்து வந்து செல்ல அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இ-பாஸ் உடன் தான் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும், வரும் நாட்களில் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்பது மிகவும் கடுமை ஆக்கப்படும் என்பதால் சென்னை வாசிகள் திணறி வருகின்றனர்.