இ பாஸ் ரத்து எதிரொலி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

 

இ பாஸ் ரத்து எதிரொலி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!


ஈரோடு செப் .1 –

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் முறை நடைமுறையில் இருந்து வந்தது. இறப்பு திருமணம் மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது. வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் இ பாஸ் உடன் கொ ரோனா இல்லை என்கிற சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தனர் அதுவும் கடுமையான சோதனைக்கு பிறகு ஈரோடு மாவட்டத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இ பாஸ் ரத்து எதிரொலி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

இந்நிலையில் இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து கடந்த 17ம் தேதி முதல் இ பாசுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்டத்தினர் வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. எனினும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்ததால் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வெளிமாவட்ட வாகனங்கள் ஈரோட்டிற்கு வந்தன. இதேபோன்று ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றன வாகனங்கள் எதுவும் எந்த கெடுபிடி இன்றி சுலபமாக சென்றன. இருந்தாலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்ததால் கருங்கல்பாளையம் சோதனை சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

-ரமேஷ்கந்தசாமி