கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க இ-மெயில்! – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க இ-மெயில்! – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை மீறி 40 சதவிகிதத்துக்கு மேல் கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது புகாரை பெற புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி புகாரை பெற வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க இ-மெயில்! – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “முழு கல்விக் கட்டணத்தை செலுத்தச் சொல்லி நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சரியாக செயல்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு மீண்டும் வருகிற 7ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க இ-மெயில்! – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

எனவே, கல்விக் கட்டணம் தொடர்பாக பெற்றோர் புகார் அளிக்க வசதியாக புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றை உருவாக்கி, அதை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் தெரிவிக்கும் புகார்களை நாளைக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது என்பது ஒரு சில விநாடிகளில் முடித்துவிடலாம். ஆனால், இதை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளையைப் படிக்க வைக்கும் பெற்றோருக்கு தெரியப்படுத்துவது எப்படி, அவர்களிடமிருந்து ஒரே நாளில் புகார் பெற்று அதை எப்படி அளிக்க முடியும். பெற்றோர் புகார் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.