இ.எம்.ஐ. செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்!

 

இ.எம்.ஐ. செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்!

தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இ.எம்.ஐ. செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்!

கொரோனா காலம் என்பதால் மக்கள் வீடுகளில் பணிகள் இன்றி முடங்கி போயுள்ளனர். இதனால் அன்றாட தேவைகளுக்கே அல்லல்படும் நிலையில் வங்கிக்கடன் தவணைகளை கட்டுவது என்பது முடியாத காரியம். இதனால் மத்திய அரசு கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இஎம்ஐ திருப்பி செலுத்த கால அவகாசம் அளித்தது. இதற்கான மத்திய அரசின் காலக்கெடு நாளையுடன் முடிகிறது.

இ.எம்.ஐ. செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்!

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால் – வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும் – குறிப்பாக, சிறு – குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருக்கிறது” என்றும் “வாடிக்கையாளர்கள், குறித்த நேரத்தில் தவணைத் தொகை செலுத்திய போது மகிழ்ந்த வங்கிகள், இப்போது பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானமும் அல்ல! ஆகவே கொரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்றும்; அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை – அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை – எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ் அவர்களையும், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.