இ-காமர்ஸ் விற்பனை நாட்டில் 90 சதவீதம் மீண்டது – ட்ரிம்மர், வைஃபை ரவுட்டர்கள் விற்பனை உயர்வு

 

இ-காமர்ஸ் விற்பனை நாட்டில் 90 சதவீதம் மீண்டது – ட்ரிம்மர், வைஃபை ரவுட்டர்கள் விற்பனை உயர்வு

டெல்லி: இ-காமர்ஸ் விற்பனை நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மீண்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் மார்ச் மாதம் முதல் மே மாதம் தொடக்கம் வரை மிகவும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இ-காமர்ஸ் தளங்களில் விற்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் பின்னர், மே மாதம் பொதுமுடக்க தளர்வுகள் ஆரம்பித்த பின்னர் மற்ற பொருட்களும் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களாக தங்களால் வாங்க முடியாத பொருட்களை மக்கள் வேகமாக ஆர்டர் செய்யத் தொடங்கினர்.

இ-காமர்ஸ் விற்பனை நாட்டில் 90 சதவீதம் மீண்டது – ட்ரிம்மர், வைஃபை ரவுட்டர்கள் விற்பனை உயர்வு

அந்த வகையில், கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு முன்பிருந்தது போலவே சகஜமாக இ-காமர்ஸ் தளங்களில் மக்கள் பொருட்களை வாங்கத் தொடங்கி விட்டனர். இதனால் நாட்டில் இ-காமர்ஸ் தளங்களின் பொருட்கள் விற்பனை 90 சதவீதம் மீண்டுள்ளது. கணினி தொடர்பான பொருட்கள், ட்ரிம்மர், வைஃபை ரவுட்டர்கள் போன்ற சில பொருட்களின் விற்பனை கொரோனா காலத்திற்கு முன்பிருந்ததை காட்டிலும் சுமார் 145 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏனெனில் பொதுமுடக்க காலத்தில் தற்போது இத்தகைய பொருட்கள் மக்களுக்கு அதிகம் தேவைப்படும் பொருட்களாக மாறியுள்ளன.