பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

 

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் போன்ற உருவம் குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே இருக்கும் ஏரி ஒன்றில் தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணிக்காக ஊழியர்கள் ஏரியை தோண்டிய போது அதில் இருந்து குடிமராமத்து முட்டை போன்ற மிகவும் பெரிதான உருண்டைகள் கிடைக்கப்பெற்றது. அதே போல, கடல் வாழ் உயிரினங்களின் படிமங்களும் கிடைக்கப்பெற்றது. அவை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டைகள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் சாத்தனூரில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்மரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலமாக, அந்த பகுதி முந்தைய காலத்தில் கடலாக இருந்து இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அவை டைனோசர் முட்டைகளா என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்றும் வரலாற்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் திருச்சி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குன்னத்தில் கண்டறியப்பட்டது டைனோசர் முட்டை இல்லை. ராட்சச முட்டை போன்ற உருண்டைகள் கடல்வாழ் உயிரினங்களின் படிமபாறை. கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் மீது அம்மோனைட் படிந்ததே ராட்சச உருண்டை ஏற்படக்காரணம். எனவே குன்னம் பகுதியில் அம்மோனைட் அதிகம் கிடைக்கும் வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.