kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


இஸ்லாமியர்களை இழிவுபடுத்திய துரைமுருகன்... முழு கருணாநிதியாய் மாறி லகலக..!

துரைமுருகன்
துரைமுருகன்
Loading...

அவ்வப்போது நக்கல் நையாண்டி செய்து தனது கட்சிக்காரர்களை மட்டுமல்ல.. ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் திமுக பொருளாளர் துரை முருகன் தனது மகன் வெற்றி பெறக்காரணமாக இருந்த முஸ்லீம் மதத்தினரின் தொப்பியை இழிவுபடுத்தி பேசியது கரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. duraimurugan

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று திமுக சார்பில் நடைபெற்றது. அதில் கலந்து திமுக பொருளாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்து கொண்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் வரத் தாமதமானது.  

தாமதமாக வந்த முகம்மது அபுபக்கரை ‘’ தொப்பியை வரச் சொல்லுங்க. தொப்பி இருந்தால் தான் காஷ்மீர் போல இருக்கும்’ என கிண்டல் செய்தார் துரைமுருகன். இதனை சற்றும் எதிர்பார்க்காத அபுபக்கர் விரக்தியாகி துரைமுருகனை விட்டு ஒதுங்கி அமர்ந்து கொண்டார். இஸ்லாமியர்களின் அடையாளமாக கருதப்படும் தொப்பியையும், காஷ்மீர் விவகாரத்தையும் துரைமுருகன் தொடர்பு படுத்தி பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

 duraimurugan

’’மானங்கெட்ட துரைமுருகனே உன் மகன் வெற்றி பெற நீ செய்த துரோகத்தையும் மறந்து சூறாவளி சுற்று பயணம் செய்தது அந்த தொப்பி தான்.’’ என இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.  கருணாநிதி மறைவுக்கு பிறகு, தன்னை கருணாநிதியாக கருதிக் கொண்டு அவ்வப்போது அவரை போல நையாண்டி செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார் துரைமுருகன். karunanidhi

கருணாநிதி நையாண்டி செய்வது எதிர்த்தரப்பினரும் ரசிக்கும்படி இருக்கும்.  விமர்சிக்கும் வகையில் அடுத்தவர் மனதை புண்படுத்தும் வகையில் அந்த நையாண்டி இருக்காது. ஆனால் கருணாநிதியை போல தன்னை கருதிக்கொண்டு துரைமுருகன் செய்து வரும் நையாண்டி பலரையும் முகம் சுழிக்க வைத்து வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.