“திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் ; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்”

 

“திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் ; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்”

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

“திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் ; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்”

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல், அறிக்கை என பரபரப்பாக இயங்கி வருகின்றன.திமுக – அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் இந்த முறையும் நேரடியாக போட்டி களத்தில் இறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விசிக ,மதிமுக ,கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ,கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாஜக,பாமக , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேபோல் தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கைகோர்த்துள்ளது.

“திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் ; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்”

இந்நிலையில் திமுக பொதுச்செயலார் துரைமுருகன் , காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.. பின்னர் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் அவர், “திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் ” என்றார். காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமுவை எதிர்த்து திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் 10-வது முறையாகப் போட்டியிடுகிறார்.