என் அம்மா தாலிய அடகு வச்சு மின்கட்டணம் செலுத்தினோம்! கண்ணீர் விட்ட துரைமுருகன்

 

என் அம்மா தாலிய அடகு வச்சு மின்கட்டணம் செலுத்தினோம்! கண்ணீர் விட்ட துரைமுருகன்

தி.மு.கவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றான “அதிமுக-வை நிராகரிக்கிறோம்” என்ற கிராம சபை கூட்டம் இன்று முதல் தொடங்கியது. குடியாத்தம் தொகுதி மேல்பட்டி கிராமத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைகட்டு எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார், ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பொது கூட்டத்தில் பேசுகிறேன். கொரோனாவால் தடைவிதிக்கப்பட்டு இப்போது நடத்த அனுமதித்துள்ளார்கள். இதை அதிமுக ஆட்சி என சொல்வதே தவறு, அந்த அம்மாவுக்கு தான் நீங்க ஓட்டு போட்டிங்க. அவங்க இறந்த உடனே அங்கு எடப்பாடி உட்கார்ந்துவிட்டார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை கொண்டு வந்தது திமுக. விவசாய குடும்பமான நாங்கள் அன்றைய மின் கட்டணத்தை கட்ட எனது அம்மா தாலியை அடகு வைத்து கட்டினோம். கடையில் எனது தாய் தாலி இருக்க, பொட்டு தங்கம் இல்லாமலேயே அவர் உயிரிழந்தார். இந்த அவலத்தை மாற்றியது திமுக. இப்படிப்பட்ட இலவச மின்சாரத்தை ரத்து செய்ய இந்த அரசு முயற்சிக்கிறது. நிச்சயம் 4 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும். அப்படி வந்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும். தி.மு.க ஆட்சியில் மின்சாரம் இல்லை என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இப்போது வெளிமாநிலத்தில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி விநியோகிக்கிறார்கள். இதனால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 1 லட்சம் கோடியாக இருந்த கடன் இன்று 6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

என் அம்மா தாலிய அடகு வச்சு மின்கட்டணம் செலுத்தினோம்! கண்ணீர் விட்ட துரைமுருகன்

சென்னை வெள்ள நிவாரணத்தின் போது நிவாரணமாக தமிழக அரசு கொடுக்கும் அரிசியோடு சேர்த்து கூடுதலாக கொடுக்க சொல்லி மத்திய அரசு தனியாக தமிழக அரசுக்கு வழங்கியது. அதை இந்த அதிமுக அரசு கள்ளத்தனமாக விற்றுள்ளது. நேற்று ஆளுநரிடம் கொடுத்த ஊழல் பட்டியலில் இதுவும் ஒன்று. பள்ளி மாணவர்கள் எல்லாம் ஆல் பாஸ் என்றால் கல்வித்தரம் பாதிக்கும். தேர்வு மூலம் மட்டுமே படித்தவர்கள், படிக்காதவர்களை கண்டறிய முடியும். தற்போது தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு இல்லை.

அதிமுக பெங்கல் பரிசை அறிவிப்பதற்க்கு முன்பாகவே நாங்கள் அவர்கள் குறித்த ஊழல் பட்டியலை வழங்கிவிட்டோம். பல இடத்தில் விஜிலென்சில் கொடுத்திருக்கோம். கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம். அதற்கு பின் தான் ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்துள்ளோம். பொங்கல் பரிசு அறிவித்ததால் தான் நாங்கள் புகார் கூறுகிறோம் என்பது அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடு தழுவிய பெரிய பிரச்சனை, பல மாநில முதல்வர்கள், பாராளுமன்றம் உள்ளது அங்கெல்லாம் போய் வரட்டும் பார்க்கலாம். முதியோர்களுக்கு தபால் வாக்கு என்பது மிகப்பெரிய பிராடு என்பது தான் எங்கள் கருத்து. தவறு நடக்க நிறைய வழிகள் உள்ளது” எனக் கூறினார்.