கூட்டணி கட்சிகள் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை- துரைமுருகன்

 

கூட்டணி கட்சிகள் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை- துரைமுருகன்

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே கூட்டணி கட்சியினர் போட்டியிட்டனர். விசிக தலைவர் திருமாவளன் மட்டும் தனிச்சின்னத்தில் களம்கண்டார். ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுகவும், விசிகவும் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அறிவித்தன.

கூட்டணி கட்சிகள் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை- துரைமுருகன்

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பி.கே.புரம் பகுதியில் நடைபெற்ற திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “அழகிரி கட்சி ஆரம்பிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை எதிர்த்து கேரளா தீர்மானம் இயற்றி உள்ளது. இதே போல் தமிழக அரசும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார். ஆட்சியில் இருப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லை, நாங்கள் அறிக்கை அளித்த பின்பாவது தீர்மானம் இயற்ற வேண்டும்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனி சின்னம் கேட்பதில் தவறில்லை, காரணம் எல்லா கட்சிகளுக்கும் தனி கொள்கை இருக்கின்றது. இதனால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறினார்.