சபாநாயகரை மீண்டும் கலாய்த்த துரைமுருகன்..!

 

சபாநாயகரை மீண்டும் கலாய்த்த துரைமுருகன்..!

இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு முன்னெடுத்துவருவதாக சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தார். சுனாமி தாக்கிய போது சாயாத ஒரே மரம் பனை மரம் தான் என்றும் தெரிவித்தார்.

சபாநாயகரை மீண்டும் கலாய்த்த துரைமுருகன்..!

அப்போது அவரை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, “இனி ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் வழங்குவதாக” தெரிவித்தார்.

அப்போது திடீரென எழுந்த அமைச்சர் துரைமுருகன், வேளாண்துறை அமைச்சர் அரை மணி நேரமாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார். அப்போதெல்லாம் அமைதிகாத்த சபாநாயகர் “பனைமரம் குறித்து பேசிய உடனே, பேரவைத் தலைவர் பேராரவத்தோடு பனை விதைகளை இலவசமாக வழங்குவதாக கூறுகிறார்” என்று அவருக்கே உரிய பாணியில் கிண்டலாக கூற சட்டப்பேரவையே சிரிப்பில் மூழ்கியது