நாங்கள் போட்ட சபதத்தை நிறைவேற்றிவிட்டோம் – துரைமுருகன் பெருமிதம்!

 

நாங்கள் போட்ட சபதத்தை நிறைவேற்றிவிட்டோம் – துரைமுருகன் பெருமிதம்!

கலைஞர் கருணாநிதியின் 50 ஆண்டுகால சட்டமன்ற பயணத்தை போற்றும் விதமாக அவரது உருவப்படத்தை திறப்போம் என்ற சபதத்தை நிறைவேற்றி விட்டோம் என அமைச்சர் துரைமுருகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவும் கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்று கருணாநிதியின் புகைப்படத்தை திறந்துவைக்க உள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த நிகழ்வையொட்டி சென்னை தலைமை செயலகம் திருவிழாக் கோலமாக மாறியுள்ளது.

நாங்கள் போட்ட சபதத்தை நிறைவேற்றிவிட்டோம் – துரைமுருகன் பெருமிதம்!

இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழா குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். அதில், ‘தனது வாழ்க்கையில் 56 ஆண்டு காலத்தை சட்டமன்றத்தில் கழித்தவர் கருணாநிதி. 45 ஆண்டுகள் அவருடன் பயணித்து உள்ளேன். முதலமைச்சராக இருந்த போது சட்டமன்ற மரபுகளை பின்பற்றி எதிர்க்கட்சிகளை மதித்து நடந்தவர் கருணாநிதி. அனைத்து பதவிகளையும் வகித்த ஒரே தலைவர். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ‘மூன்றாம் தர அரசு’ என திமுக அரசை எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் விமர்சித்தார். அதற்கு கருணாநிதி அளித்த பதில் அனைவரையும் வியக்க வைத்தது. இது மூன்றாம் தர அரசு அல்ல நான்காம் தர அரசு. பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற அடிப்படையில் சூத்திரர்களுக்கான நான்காம் தர அரசு என்று பேசினார். அன்றைய தினம் சட்டமன்றமே வியந்து பார்த்தது என்று கூறியுள்ளார்.

நாங்கள் போட்ட சபதத்தை நிறைவேற்றிவிட்டோம் – துரைமுருகன் பெருமிதம்!

மேலும், திமுகவை சேர்ந்த ஒருவர் கருணாநிதி படத் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தலைவர் ஆட்சி அமைந்த பிறகு விழா எடுத்து கொண்டாடுவோம் என்று அப்போது தெரிவித்தோம். அந்த சபதத்தை தற்போது நிறைவேற்றி விட்டோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.