மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்!

 

மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்!

கர்நாடக அரசுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான காவிரி நதிநீர் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதால், தமிழக அரசு மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்காமல் மத்திய அரசும் மௌனம் காக்கிறது.

மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்!

மேகதாது அணை கட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மேகதாது அணையால் இரு மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை கட்டக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் குறித்து பேச டெல்லிக்கு செல்லவிருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன் படி, மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு சென்றார். இன்று மாலை 12 மணிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசுகிறார். மேகதாது அணை குறித்தும் தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை குறித்தும் தமிழகத்துக்கான உரிய நீர் பங்கீடு குறித்தும் துரைமுருகன் பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.