நான் மரு வச்ச துரைமுருகன்! நீதிமன்றத்தையே குழம்ப வைத்த திமுகவினர்!

 

நான் மரு வச்ச துரைமுருகன்! நீதிமன்றத்தையே குழம்ப வைத்த திமுகவினர்!

.பழைய திரைப்படங்களில் மாறுவேடம் என்பதற்கு ஒரு சிறிய மருவை மட்டும் ஒட்டினால் போதும் என்பது போன்ற ஏமாற்று வேலைகளை பார்த்திருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தலின்போது வேலூரில் திமுக-வின் துரைமுருகன் மற்றும் அவரது மகன் சார்ந்த இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கு நினைவிருக்கலாம்.

இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணையில் திமுகவிலிருந்து கதிர் ஆனந்தின் தந்தையான துரைமுருகன், D.துரைமுருகன். ஆனால் திமுக டிரஸ்டின் நிரந்தர டிரஸ்டீயும் , திமுக கட்சியின் பொது செயலாளருமான துரைமுருகன் வெறும் துரைமுருகன். அதனால் இருவரும் வேறு என்று ஒரு மனுவை திமுக தாக்கல் செய்திருக்கிறது. இந்த ரிட் பெட்டிஷனுக்கு ஆதரவாக பொன்முடியும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.

நான் மரு வச்ச துரைமுருகன்! நீதிமன்றத்தையே குழம்ப வைத்த திமுகவினர்!

இதனையடுத்து ரூபாய் கைப்பற்றப்பட்ட D.துரைமுருகனும் , D இல்லாத வெறும் துரைமுருகனும் ஒரே நபர் தான் என்று ஆதாரம் கொடுக்க வேண்டிய பொறுப்பு & அவசியம் வருமான வரித்துறைக்கு ஏற்படுகிறது. இருவரும் ஒரே நபர் தான் என்பதற்கான ஆதாரத்தை தேடியதில் 2005இல் காட்பாடியில் விவசாய நிலங்களை பட்டா செய்த கிரய பத்திரத்தில் D.துரைமுருகன் என்கிற பெயரோடு அவருடைய புகைப்படமும் சேர்ந்து இருக்கும் ஆதாரம் சிக்கியது. இதனை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வருமான வரித்துறை தாக்கல் செய்தது. இதற்கு வருமான வரித்துறை இரண்டு துரைமுருகன்களும் ஒன்றே என ஆதாரத்தை சம்பிக்கக்கோரி விசாரணை தொடரும் என்றிருக்கிறார்.