திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் 9ம் தேதி பொறுப்பேற்பு!

 

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் 9ம் தேதி பொறுப்பேற்பு!

வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகனும் டிஆர் பாலுவும் பொறுப்பேற்க உள்ளனர்.

திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்ற போது, அக்கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த துரைமுருகன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் பொருளாளர் பதவியில் இருந்து வந்த நிலையில் , திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானதால் அவரது பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதன் படி, அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டு மீண்டும் நீக்கப்பட்டது.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் 9ம் தேதி பொறுப்பேற்பு!

அதனால் திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வரும் 9 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதனால் இவர்கள் போட்டியின்றி திமுகவின் முக்கிய பதவிகளுக்கு தேர்வாகினர்.

முக ஸ்டாலின் அறிவித்திருந்ததன் படி மனுத்தாக்கலை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று 4 மணியுடன் நிறைவடைந்தது. பொதுக்குழு கூட்டத்திலேயே பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிஆர் பாலுவும் துரைமுருகனும் போட்டியின்றி தேர்வானதால் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொறுப்பேற்க உள்ளனர்.