திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், டிஆர் பாலு போட்டியின்றி தேர்வு!

 

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், டிஆர் பாலு போட்டியின்றி தேர்வு!

திமுகவில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு துரைமுருகனும் டிஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியும் தற்போது காலியாக இருக்கிறது. அந்த பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், அந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், டிஆர் பாலு போட்டியின்றி தேர்வு!

அதன் படி இன்று அண்ணா அறிவாலயத்தில் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் ஆர்.எஸ் பாரதியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அந்த 2 பதவிகளுக்கும் இவர்கள் தான் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. அதன் படியே, இவர்களை எதிர்த்து திமுக பதவிகளுக்கு யாரும் போட்டியிடாத நிலையில், வேட்பு மனுதாக்கல் செய்யும் நேரமும் 4 மணியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தான் பொதுச் செயலாளர் என்னும் பெரிய பதவியை அடைந்திருப்பதாக கூறினார். இதன் மூலம் அவர்கள் இரண்டு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யபபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.