ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினால் மட்டும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியுமா? – துரைமுருகன்

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினால் மட்டும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியுமா? – துரைமுருகன்

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அங்கு கோயில் வளாகத்திற்கு சென்ற பிரதமர் மோடி மரக்கன்றை நட்டார். தனிமனித இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்வுகளின் போது பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினால் மட்டும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியுமா? – துரைமுருகன்

இந்நிலையில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினால் மட்டும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியுமா? அடுத்த தேர்தலின் போது அப்போதைய சூழல்தான் வெற்றியை தீர்மானிக்கும். கு.க. செல்வத்திற்கு ஒன்றும் தெரியாது, மக்களை ஈர்க்கும் சக்தி அவருக்கு இல்லை. தகரங்களான வி.பி.துரைசாமி, கு.க. செல்வம் போன்றவர்கள் திமுகவை விட்டுச்செல்வதால் இடர்பாடு இல்லை. இவர்களை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. நான் சட்டமன்றத்தில் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது. ” எனக்கூறினார்.