அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்துறைக்கு அனுப்பப்பட்டது- துரைமுருகன்

 

அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்துறைக்கு அனுப்பப்பட்டது- துரைமுருகன்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள் மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஊழல் புகார்களை அடுக்கி வருகிறார். கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை மீது ஆளுநரிடம் திமுக 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்களை கொடுத்தது. தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுகிறது என்றும் குற்றம் சாட்டியது. அத்துடன் 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலையும் திமுக ஆளுநரிடம் அளித்திருந்தது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஊழல் செய்துள்ள அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுக சார்பில் ஊழல் புகார் அளிக்கப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது.

அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்துறைக்கு அனுப்பப்பட்டது- துரைமுருகன்

இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்த, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை சமர்பித்தார். ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்கள், “தமிழக அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் முறைகேடு புகார் அளித்தோம். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார். ஏற்கனவே அளித்த புகார்களை, மத்திய உள்துறையிடம் அனுப்பியுள்ளதாகவும் ஆளுநர் கூறினார். அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.