தோழியோடு சிறை செல்ல இருந்தவர் பாடையோடு போயிட்டார்! ஜெயலலிதாவை விமர்சித்த துரைமுருகன்

 

தோழியோடு சிறை செல்ல இருந்தவர் பாடையோடு போயிட்டார்! ஜெயலலிதாவை விமர்சித்த துரைமுருகன்

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “அமித்ஷா வந்து அதிமுகவுடன் கூட்டணி பேசியதிலும், அரசு விழாவில் கலந்து கொண்டதிலும் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி அரசியல் பேசி எதிர்க்கட்சியினரை இஷ்டத்துக்கு வசைப்பாடி சென்றுள்ளார் அமித்ஷா. இது ஜனநாயகத்தின் நெறிமுறையை அழிக்கும் செயல். அரசியலுக்கும் அரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனால் ஜனநாயகம் செத்து சர்வதிகாரம் தலை தூக்கும்.

அரசு விழாவில் எதிர்க்கட்சியை சாடி இருப்பது வருத்தத்துக்குரியது. பழைய நெறிமுறைகளை மாற்றிவிட்டு மத்திய, மாநில அரசுகள் இப்படி நடப்பதை தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய அமைச்சராக உள்ள அமித்ஷா போன்றவர்களுக்கு இது அழகல்ல.

தோழியோடு சிறை செல்ல இருந்தவர் பாடையோடு போயிட்டார்! ஜெயலலிதாவை விமர்சித்த துரைமுருகன்

தமிழகம் சிறந்து விளங்குவதாக அமித்ஷா கூறியுள்ளார். கேடுகேட்ட தமிழகத்திலே இப்படி என்றால் மற்ற மாநிலங்கள் எப்படி இருக்கும். வாரிசு அரசியல், ஊழலை பற்றி அமித்ஷா பேசியிருக்கிறார். தென்மாவட்டத்திலும் ஒழிப்போம் என்றார். அவருக்கு பக்கத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ம், ஜெயகுமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்களாம். அவர்கள் மகன்கள் எம்.பியாக இல்லையா? விஜயரஜ், பிரமாகத் மகாஜன், வருண் காந்தி, பியூஸ்கோயல் மகன், எடியூரப்ப, முண்டேவின் மகள், உ.பி முதல்வர் அதித்யா இப்படி நிறைய பேர் வாரிசு அரசியலை செய்கிறார்கள் அவை எல்லாம் வாரிசு அரசியல் இல்லையா இதை எல்லாம் ஒழித்து விட்டாரா அமித்ஷா?

எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை. இந்த மாதிரி பேச்சையெல்லாம் அமித்ஷா பீகாரில் பேச வேண்டும் . ஊழலை பற்றி பேசுவதர்க்கு முன்னால் ஊழல் புரிந்த ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டாரே அதை என்ன சொல்வது. தோழியோடு சிறை செல்ல இருந்தவர் பாடையோடு போயிருக்கார். பா.ஜ.க சாதனைகளை பட்டியல் இட தயார் என்றார்கள். புயல்கள் தாக்கியதில் எவ்வளவு நிதி உதவி செய்தீர்கள் என பட்டியல் இட தயாரா? நேற்றுவரை ஒருவருக்கொருவர் வசை பாடிவந்தவர்கள் இன்று சேர்ந்துள்ளார்கள். தி.மு.கவை மிரட்டுவது போல் அமித்ஷா பேசியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என அமித்ஷா கூறியுள்ளார். பீகார் அல்ல தமிழகம் என்பதை அவர் உணர வேண்டும்.” எனக்கூறினார்.