இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி! அடித்து சொல்லும் துரைமுருகன்

 

இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி! அடித்து சொல்லும் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் கிராமத்தில் தி.மு.க பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “வரலாற்றிலேயே முதல் முறையாக காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது இந்த அரசு தான். நேற்று தி.மு.க தலைவர் சொன்னார் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக படிக்க வேண்டும் என சொன்னார். எங்கள் தலைவர் அறிக்கை கொடுத்த உடனேயே அ.தி.மு.க அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. நாங்கள் விவசாய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோருவது அரசியல் காரணங்களுக்காக அல்ல. விவசாயிகள் நலனுக்காகவே இதை எதிர்க்கிறோம்.

இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி! அடித்து சொல்லும் துரைமுருகன்

நேற்று மாலை வரை கொரோனா அச்சம் தெரியாத அரசுக்கு இரவு 9 மணிக்கு தான் கொரோனா அச்சம் தெரியவந்தததா? அப்போதுதான் கிராம சபையை ரத்து செய்தார்கள். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் கருத்து வேறுபாடால் அரசு அதிகாரிகள் குழம்பிபோய் உள்ளார்கள். எங்கள் மீது தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தாலும் நாங்கள் அதை நீதிமன்றத்தில் சந்திப்போம். இந்த ஆட்சி இன்னும் 4 மாதம் தான் ஆட்சி இருக்கும். அதன் பிறகு பார்க்கலாம். ஒரே நாடு ஒரே ரேசன் காடு ஒரே மண், ஒரே கொள்கை என்பது நாட்டுக்கு ஆபத்தானது” எனக் கூறினார்.