‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்’ : ஓபிஎஸ் ட்வீட்!

 

‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்’ : ஓபிஎஸ் ட்வீட்!

தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் இன்னும் சில மாத காலத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்’ : ஓபிஎஸ் ட்வீட்!

இந்நிலையில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!”என்று பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸின் இந்த ட்விட்டர் பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.