நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பைக் கூட விட்டுத் தர மாட்டோம்- துணை முதல்வர் ஓபிஎஸ்

 

நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பைக் கூட விட்டுத் தர மாட்டோம்- துணை முதல்வர் ஓபிஎஸ்

இந்தியா – சீனா எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 76 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் லடாக் எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பைக் கூட விட்டுத் தர மாட்டோம்- துணை முதல்வர் ஓபிஎஸ்

கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், “லடாக் விவகாரத்தில் பிரதமர், மத்திய அரசு மற்றும் ராணுவத்திற்கு தமிழகம் துணை நிற்கும், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள். நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட விட்டு தரமாட்டோம். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். கொரோனா போன்ற தேசிய பேரிடர் நேரத்தில் நாட்டை சிறப்பாக வழிநடத்தும் பிரதமர் மோடிக்கு நன்றி ” என தெரிவித்தார்.