குமரியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு!

குமரியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு!

கன்னியாகுமரி

குமரி மாட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையினால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது

வங்க கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் இடைவிடாது விடிய விடிய பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகின.

குமரியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு!

குறிப்பாக நாகர்கோவில் நகர் பகுதி, சுசீந்திரம், குளச்சல், பூதப்பாண்டி, சாட்டுபுத்தூர், மார்த்தாண்டம், தக்கலை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட மாவட்டத்தின் பகுதிகளில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும், விளை நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. வெள்ள நீரில் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்ததால் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகினர்.

குமரியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு!

மேலும், கனமழையின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், மரங்கள் விழுந்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனிடையே கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

குமரியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு!

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. அதேபோல், கீழ புத்தேரி நெடுஙகுளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் வீரமங்கலம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது மழை சற்று குறைந்துள்ள நிலையில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலையில் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.