’துபாய் நாட்டு வள்ளல் பாரி’ ரஷித்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

 

’துபாய் நாட்டு வள்ளல் பாரி’ ரஷித்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் தமிழ் இலக்கியத்தில் படித்திருப்போம். அவர்களில் முக்கியமானவர் பாரி. ஒரு முல்லைச் செடி அதன் கொடி படர இடம் இல்லாமல் தவித்ததால் மன்னனான பாரி தான் சென்ற தேரையே அந்த இடத்தில் விட்டு வந்தான். அந்த முல்லை கொடி தேரில் படர்ந்து வளர்ந்தது. சரி இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?

இப்போதும் ஒரு வள்ளல் இருக்கிறார். அவர் சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறார். அவர்தான் துபாய் நாட்டைச் சேர்ந்த ராஷித். துபாய் நாட்டின் இளவரசரகவும் நிர்வாக கவுன்சிலின் சேர்மனாகவும் இருப்பவர் ஷேக் ஹம்டன் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தும். சுருக்கமாக ராஷித் என்று குறிப்பிடப்படுகிறார்.

’துபாய் நாட்டு வள்ளல் பாரி’ ரஷித்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ராஷித் விலங்குகள், பறவைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல விலங்குகளைத் தத்தெடுத்து வளர்த்தும் வருபவர்.

இது கொரோனா நோய்த் தொற்று பரவும் காலம் என்பதால், பலரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அதனால் அவர்களின் கார், டூவீலர்கள் பயன்படுத்தாமல் இருக்கின்றன. இளவரசர் ராஷித்தின் நிலையும் அப்படித்தான். அவரின் கார் நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் சின்ன குருவி ஒன்று அதன்மீது கூடு கட்டி முட்டைகள் இட்டுவிட்டது. தற்போது அக்குருவி அம்முட்டைகளை அடைகாத்தும் வருகிறது.

’துபாய் நாட்டு வள்ளல் பாரி’ ரஷித்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

இதைக் கவனித்த இளவரசர் ராஷித், அந்தக் குருவியின் அடைகாத்தலைக் கெடுக்க விரும்பாமல் தன் காரை எடுக்காமல் அங்கேயே விட்டு வைத்திருக்கிறார். அதை அவர் எடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முல்லைக்குத் தேர் கொடுத்ததுபோல, ராஷித் குருவிக்கு காரைத் தந்திருக்கிறார்.