ட்ராபிக்கில் நின்ற போலீஸ் -குடித்து விட்டு வந்த நபர் -அடுத்து நடுரோட்டில் நடந்த சம்பவம்

 

ட்ராபிக்கில் நின்ற போலீஸ் -குடித்து விட்டு வந்த நபர் -அடுத்து நடுரோட்டில் நடந்த சம்பவம்

ஒரு போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளை தாக்கி, அவரது சீருடையை உருவிய ஒரு குடிகாரரை போலீசார் கைது செய்தனர்

ட்ராபிக்கில் நின்ற போலீஸ் -குடித்து விட்டு வந்த நபர் -அடுத்து நடுரோட்டில் நடந்த சம்பவம்

கர்நாடகாவின் பெங்களூருவில் சதாஷிவ்நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் கான்ஸ்டபிளாக தயானந்த் என்பவர் வேலை பார்த்தார் .அவர் திங்கள்கிழமை சஞ்சய் நகர் பகுதியில் உள்ள தேவநாத்ரா வட்டத்தில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது சில உள்ளூர்வாசிகள் தயானந்தை அணுகி, 50 வயதான ஒருவர், குடித்துவிட்டு அருகிலுள்ள ஒரு மார்க்கெட்டின் பின்னால் கலாட்டா செய்து வருவதாக புகார் கூறினர். இதைத் தொடர்ந்து, தயானந்த் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இடத்தில் கலாட்டா செய்த முகுந்தா என்பவரை பிடித்து விசாரித்தார்

அப்போது அவர் அந்த கான்ஸ்டபிளின் சீருடையை கிழித்து ,அவரின் முகத்தில் குத்தி,அடித்தார். பின்னர் அவர் ஒரு வீட்டிற்குள் சென்று, ஒரு இரும்புக் கம்பியை எடுத்து வந்து அந்த கான்ஸ்டபிளை அடிக்க வெளியே வந்தார். அதற்குள் அண்டை வீட்டாரும், வழிப்போக்கர்களும் வந்து கான்ஸ்டபிளை மீட்டனர் .பிறகு முகுந்தாவைக் கீழே தள்ளினர். பின்னர் அந்த போலீஸ்காரர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்

பின்னர் அந்த முகுந்தா கைது செய்யப்பட்டு அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.