போதையில் வியாபாரியுடன் மோதல்… ஐஸ் வண்டியைத் தூக்கிக் கொண்டு போன போலீஸ்காரர்கள்!

 

போதையில் வியாபாரியுடன் மோதல்… ஐஸ் வண்டியைத் தூக்கிக் கொண்டு போன போலீஸ்காரர்கள்!

உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர்கள் இருவர் ஐஸ்கிரீம் வண்டியை அபகரித்துக் கொண்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேச போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்கிரீம் வியாபாரியின் புகாரின்படி, அந்த இரு காவலர்களும் இலவசமாக ஐஸ்கிரீம் தராததால் அவரது வண்டியை தள்ளிக்கொண்டு போனதாக தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவர் முதன்மை காவலர் அகிலேஷ் பாண்டே மற்றும் கான்ஸ்டபிள் சிவம் சஹர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவத்தின் து இரு காவலர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

போதையில் வியாபாரியுடன் மோதல்… ஐஸ் வண்டியைத் தூக்கிக் கொண்டு போன போலீஸ்காரர்கள்!

செவ்வாய்க்கிழமை அன்று இரு காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ஐஸ்கிரீம் வியாபாரியை வழிமறித்து அவரின் இருப்பிடம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது காவலர்களில் ஒருவர் ஐஸ்கிரீம் வியாபாரியை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். அதே நேரத்தில் தலைமை காவலர் பாண்டே ஐஸ்கிரீம் வண்டியை அபகரித்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் பகுதியில் அத நபர் ஐஸ்கிரீம் விட்டதால்தான் காவலர்கள் அவரை விசாரணை செய்தனர் என்று தெரிவித்துள்ளனர்.