சென்னையில் போதைப் பொருள் விற்பனை.. தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை!

 

சென்னையில் போதைப் பொருள் விற்பனை.. தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதே போல, போதைப்பொருட்கள் விற்கப்படுவதாகவும் பரபரப்பு புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் சிலர் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் போதைப் பொருள் விற்பனை.. தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை!

அந்த தகவலின் பேரில் உடனடியாக தனிப்படை அமைத்த காவல் ஆணையர், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் சிவாச்சாரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

சென்னையில் போதைப் பொருள் விற்பனை.. தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரை கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர், அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இது குறித்து கார்த்திக் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கும் அந்த போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.