வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் போதை பொருட்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்!

 

வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் போதை பொருட்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்!

ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தியாவசிய வாகன சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதை பொருட்கள் கடத்திச் செல்வது அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்துறைக்கு சென்னைக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் போதை பொருட்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்!

அதன் படி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

விசாரணையில் பெங்களூரு சந்தாபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஓட்டுனரை கைது செய்த போலீசார், போதை பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், போதை பொருட்களை ஆர்டர் செய்தவர்களை தேடி வருகின்றனர்.